அழகிய நாட்கள்
வெள்ளிக்கிழமை மாலை
பள்ளியின் கடைசி வகுப்பு
லேசான தூரல்
அடுத்தநாள் சனிக்கிழமை என
விடுமுறை குதூகலம்
அப்பொழுதெல்லாம் முதுகில் பாரம் இருக்கும்
இப்பொழுது போல் மனதில் அல்ல
வீட்டிற்கு வந்தவுடன் பாரத்தை
இறக்கி ஓரமாய் வைத்துவிட்டு
முகம் கழுவி உடைமாற்றி வர
அம்மா ஊட்டிய சாதம்
அன்பு சேர்ந்து அதிகமாய்
உள்ளே போனது
அவசரமாய் எழுந்து கைகழுவி
விளையாட செல்கிறேன் என்று ஓடியவனை
சாப்பிட்டவுடன் இனிப்பு கேட்பான் என
பதம் பார்த்து செய்த ரவாலட்டு
சிறிது நேரம் அமர வைத்தது
அதற்குள் அவன் பெயற்சொல்லி நண்பர்கள் அழைக்க
அவர்களுக்கும் சேர்த்து சில லட்டுக்களை
கை எடுத்துக்கொண்டு கால்கள் ஓடியது
அதனை நண்பர்களிடம் கொடுக்க ஆசையாய் சாப்பிட்டு
மழைத்தூரலில் நனைந்தபடியே
ஆனந்த விளையாட்டு
நாட்கள் அழகாய் இருந்தது அந்த வயதில்…
Please leave a comment in the comment box, and let us know what you think
admin bpp